கணவனின் நண்பருடன் உல்லாசமாக இருந்த பெண், வீடியோ மூலம் கணவனிடம் சிக்கிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
கணவனின் நண்பனுடன் உல்லாசமாக இருந்த மனைவி! சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த கேமராவால் சிக்கிய சுவாரஸ்யம்!

சீனாவைச் சேர்ந்த யாங் என்ற அந்த நபர் தனது சார்ஜ் ஏற்றியபடி தனது கேமராவை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது அந்த கேமராவும் செயல்பாட்டில் இருந்துள்ளது. திரும்பி வீட்டுக்கு வந்த யாங் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சியுற்றார்.
காரணம் அதில் தனது மனைவியும் தனது நெருங்கிய நண்பரும் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவாகியிருந்ததே ஆகும். லியு என்ற அந்த நபர் உள்ளூர் நகர மேயராக இருந்தார். இச்சம்பவம் 2016ஆம் ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான காரணத்தையும் யாங் கூறியுள்ளார். தனது மகன் பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த காரணத்தால் தான் இந்த வீடியோ குறித்து அப்போது வாய் திறக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
இது பற்றி பேசிய யாங்கின் மனைவி சி ஹூவா, இது டாஸ் ரக கேமராவில் எடுக்கப்பட்ட காட்சி அல்ல என்றும் ரகசிய கேமராவில் எடுக்கப்பட்டது என்றும் தனது கணவன் மீது பழி சுமத்தி உள்ளார். தற்போது அந்தப் பெண் நகர இணைச் செயலாளராக பொறுப்பில் உள்ளார்.