அலட்சியமாக இருந்த தாய்! குக்கருக்குள் தலையை நுழைத்த ஒரு வயது குழந்தை! பிறகு ஏற்பட்ட பகீர் சம்பவம்! எங்கு தெரியுமா?

கைக்குழந்தையின் தலை குக்கருக்குள் சிக்கிக்கொண்ட சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


குஜராத் மாநிலத்தில் பவா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அந்த குழந்தை குக்கரை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தது. பெற்றோர் குழந்தை விளையாடி கொண்டிருந்ததை கண்டு அலட்சியமாக இருந்துள்ளனர்.

எதிர்பாராவிதமாக குழந்தையின் தலை குக்கருக்குள் சிக்கிக்கொண்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பெற்றோர் குழந்தையின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் குழந்தையின் தலையை குக்கரில் இருந்து வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் குழந்தையின் தலையை வெளியே எடுக்க இயலவில்லை.

பின்னர் அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்களை வைத்து குக்கரை தலையிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அப்போதும் குக்கர் வெளியே வரவில்லை. மேலும் முரட்டுத்தனமாக முயற்சி செய்ததால் குழந்தையின் தலையில் ஆங்காங்கு காயங்கள் ஏற்பட்டு அழத்தொடங்கியது.

உடனடியாக பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று குக்கரை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் நிபுணர்களாகவும் குக்கரை எடுக்க இயலவில்லை. பின்னர் குழந்தையை காப்பாற்றுவதற்கு பாத்திரம் ரிப்பேர் செய்யும் நபர் அழைக்கப்பட்டார். அவர் குக்கரை வெட்டி குழந்தையின் தலையை சிக்கிக்கொள்ளாமல் மீட்டெடுத்தார். 

அதன்பிறகு குழந்தைக்கு தலையில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.