தாயை பச்சிளம் குழந்தை வயிற்றில் இருந்தபோதே கொலை செய்ததாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
வயிற்றில் தாயின் குடலை தின்ற பயங்கரம்! பிரசவம் பார்த்த நர்ஸ் மரணம்! அகன்ற வாயுடன் கோரைப் பற்கள்! வைரலாகும் குழந்தையின் அதிர்ச்சி பின்னணி!
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் அகோர வீடியோ ஒன்று ஒரு குறுஞ்செய்தியுடன் உலவி வந்தது. "கலிகால பிரசவம் அசாமில் நிகழ்ந்துள்ளது. வயிற்றில் இருந்தபோது குழந்தை தாயின் குடலை தின்று தாயை சாகடித்துள்ளது. மேலும் வயிற்றை அறுத்து குழந்தையை வெளியே எடுத்த சில மணி நேரங்களிலேயே செவிலியர் உயிரிழந்தார்.
வெளியே எடுத்தபோது 8 கிலோவாக இருந்த குழந்தை, அதன் பின்னர் 13 கிலோவாக மாறியது. மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு 17 விஷ ஊசிகளை போட்டு குழந்தையை கொன்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரித்ததில், குழந்தை பிறந்தது மட்டுமே உண்மை என்பதும், மற்றபடி வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த குழந்தை ஹர்லிகுவின் இத்யோசிஸ் என்ற டிஎன்ஏ குறைபாட்டுடன் திறந்துள்ளது. லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மட்டும் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த குறைபாட்டை மருத்துவர்கள் 'ABCA 12' என்று அழைக்கின்றனர். இந்த குறைபாட்டுடன் இந்தியாவில் இதுவரை மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. 3 குழந்தைகளும் பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளன.
வாட்ஸ்அப் தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. வதந்திகளால் பல விபரீதங்கள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்தால், வதந்திகள் காணாமல் போய்விடும்.