3 கால்கள் மற்றும் 2 பிறப்புறுப்புகள்! அதிசய குழந்தையை பார்த்து அதிர்ந்த பெற்றோர்! எங்கு தெரியுமா?

ரஷ்யாவில் குழந்தை ஒன்று 3  கால்கள் மற்றும் 2 பிறப்புறுப்புடன் பிறந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யா நாட்டில் சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவர் 3 கால்கள் மற்றும் 2 பிறப்புறுப்புடன் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை கண்டவுடன் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த பெண்ணுக்கு இரட்டை பிரசவமாக இருந்திருக்க வேண்டும். மேலும் அந்த குழந்தையின் 3-வது கால் இன்னொரு குழந்தை உடையதாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருதினார்.

இந்நிலையில், குழந்தையை மருத்துவர்கள் பரிசோதிக்க தொடங்கினர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உபரி உறுப்புகளை அகற்றிய பின்னர் மற்ற குழந்தைகளைப் போன்று சாதாரணமாக இருக்க இயலும் என்று கருதினர்.

பின்னர் அந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் குழந்தை தற்போது சாதாரணமாக விளையாடி வருகிறது.

குழந்தையின் தாயார் கர்ப்பமான முதலிலேயே, குழந்தைக்கு மூன்று கால்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தையை கலைக்க அவருடைய மனது ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் குழந்தை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.

இந்த செய்தியானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‌