6 மாதத்தில் குறைப்பிரசவம்! வெறும் அரைக்கிலோ எடையுடன் பிறந்த குழந்தை! அதிர்ந்த பெற்றோர்.. ஆனால்?

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் நலம் பெற்றிருப்பது ஈரோட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் தாராபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவியின் பெயர் பானுபிரியா. தம்பதியினருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்து இறந்தன. மேலும் 2 குழந்தைகள் வயிற்றிலேயே இறந்து போயின. இதனால் மிகவும் மனம் வெதும்பிய தம்பதியினர் கடந்த 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

5-வது முறையாக கருவுற்ற பானுப்பிரியா வைக்கு ஆறு மாதத்திலேயே குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தது. வெறும் 600 கிராம் எடையுடன் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் குழந்தையை ஜாக்கிரதையாக கையாண்டு வந்தனர்.

மருத்துவர்களின் விடாமுயற்சியால் வெறும் 3 மாதங்களில் குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் ஆக அதிகரித்தது. குழந்தைக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பூபதி கூறுகையில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையானது வெளிநாடுகளிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே சாத்தியமாக அமைந்திருந்தது.

ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஈரோடு போன்ற சிறு நகரங்களிலும் இது மிகவும் சாத்தியமாக உள்ளது. இந்த குழந்தையானது பிறந்தவுடனே மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தது. ஆகையால் சிறிது காலம் வரை செயற்கை சுவாசம் அளித்து வந்தோம். புரதச் சத்துக்களை தொப்புள் கொடியின் மூலம் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு செலுத்தி வந்தோம்.

முதலுதவிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரிவர மேற்கொண்டால் இதுபோன்ற குழந்தைகளை நிச்சயமாகக் காப்பாற்ற இயலும் என்றும் மருத்துவர் கூறினார்.

இந்த சம்பவமானது குழந்தையின் பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.