கைப்பிடி இல்லாத குறுகிய சுவர்..! ஆபத்தை உணராமல் ஜன்னலில் இருந்து பால்கனிக்கு ஓடிய சிறுமி! ஆனால்? திக் திக் வீடியோ உள்ளே!

ஸ்பெயின் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் குழந்தை ஒன்று ஆபத்தை உணராமல் ஜன்னலிலிருந்து பால்கனிக்கு ஓடி விளையாடிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


ஸ்பெயின் நாட்டில் பாரடைஸ் பீச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் அபார்ட்மெண்டில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் நான்காவது தளத்தில் வாழ்ந்து வரும் ஒருவரது மகள் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சிறுமி தன்னுடைய வீட்டு ஜன்னலில் இருந்து வெளியே வந்து கைப்பிடி இல்லாத பால்கனியில் ஓடி ஓடி விளையாடி இருக்கிறார். ஆபத்தை உணராத அந்த சிறுமி மீண்டும் மீண்டும் அதேபோல் வீட்டிற்கும் பால்கணிக்கும் ஓடிவந்து விளையாடியுள்ளார். பின்னர் அந்த சிறுமி எந்தவித ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.