சிறுவன் சுர்ஜித் சுயநினைவை இழந்துவிட்டான்! சற்று முன் டாக்டர்கள் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்!

3-வது நாளாக தவித்து வரும் சுர்ஜித் சுய நினைவை இழந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறானது 30 அடி ஆழம் பெற்றது. இந்த கிணற்றுக்கு அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் விளையாடி கொண்டிருந்தது.

விளையாடி கொண்டிருந்த  குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த உடன் பதறிப்போன அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 3-வது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்மை மருத்துவர் கூறுகையில், "குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்கான அறிகுறிகள் எங்களுக்கு தெளிவாக தெரிகின்றன. குழந்தையின் உடல் வெப்ப நிலையை வைத்து குழந்தை உயிரோடிருப்பதை எங்களால் உறுதி செய்ய இயன்றது.

ஆனால் குழந்தை தன்னுடைய சுயநினைவை இழந்து விட்டது. 75 மணி நேரம் சுயநினைவை இழந்தால் கூட குழந்தையை மீட்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தையை காப்பாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் நிரம்பிய 5 ஆம்புலன்ஸ்கள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் குழந்தையை வெளியே எடுத்துவிட்டால், குழந்தையை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.