முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிர் இழந்தவர்களின் 14 குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்..!

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு அவ்வப்போது நிதியுதவி வழங்குவதில் எடப்பாடி பழனிசாமியின் அரசு துரிதமாக பணியாற்றி வருகிறது.


அந்த வகையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை இது. கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த பகவதி நாடார் என்பவரின் மகன் மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக பிடித்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  

அகஸ்தீஸ்வரம் வட்டம், தென்தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கநாடார் என்பவரின் மகன் நந்தகுமார் என்பவர் தெருவிளக்கு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் எதிர்பாராத வகையில் உயிர் இழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டிருக்கிறார்.