தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!

தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திராவிடக் கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் இவரது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.