சிதம்பரத்திடம் இவ்வளவு கோடி சொத்துக்கள் இருக்கிறதா? அடேங்கப்பா ஆச்சர்யம்!

120 லட்சம் கோடி சொத்துக்கள் வைத்து இருக்கிறார் சிதம்பரம், என்கிற ஒரு செய்தி வெளி வந்து இருக்கிறது. ஒரு தனி ,மனிதருக்கு அதுவும் மக்கள் சேவை செய்பவருக்கு ஏன் இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் என்று கேட்கிறார் தொல்காப்பியன்.


மக்கள் சேவை செய்யும் ஒரு அரசியல் தலைவன் இப்படி கோடி கோடியாக சொத்துக்களை குவித்துக் கொண்டு இருந்தால் அவனால் ஆளப்படும் மக்கள் எப்படி வளர்ச்சியை பெறுவார்கள்.

பணம் என்பது மக்கள் உழைப்பின் ஒரு திடப் பொருள். ஒரு தனி மனிதன் தனது நேரத்தை.செலவிட்டு உழைத்து உருவாக்கும் உற்பத்தியின் சமூக உருவம்தான் ‘பணம்’ எனவே பணம் என்பது மக்களின் கூட்டு உற்பத்தியின் சின்னம் எனலாம். ஒரு நாட்டில் புழங்கும் பணத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் உழைப்பும் அடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒரு நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் அந்த நாட்டில் புழங்கும் பணத்தில் சம உரிமை இருக்கிறது.

இது உண்மையானால், ஒரு குறிப்பிட்ட தனி நபரிடம் அளவுக்கு அதிகமான பணம் குவிகிறது என்றால் அளவுக்கு அதிகமான அந்த பணம் வேறு வேறு நபர்களுக்கு சொந்தமானது என்று அர்த்தம் அல்லவா? ஒருவன் பெரும் பணக்காரனாக இருப்பது அங்கு பல ஏழைகள் இருக்கிறார்கள் என்பதன் குறியீடுதானே?

ஓரு அரசியல்வாதியின் மக்கள் சேவை என்பது ஒவ்வொரு தனி நபருக்குமான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதுதானே? ஆனால் மக்களுக்கு முறையாக சென்று சேர வேண்டிய பணத்தை ஒரு அரசியல் தலைவன் அவனது பணக் கிடங்கை நோக்கி திருப்பி விட்டுக் கொள்கிறான் என்றால் அவன் உண்மையில் என்ன செய்கிறான்?

அவனது சொந்த நாட்டு மக்களை வறியவர்கள் ஆக்குகிறான். அவர்களை ஏழைகளாக நீடிக்கச் செய்கிறான். அவர்களின் பணத்தை அபகரித்துக் கொண்டு அவர்களை பிச்சைக்கார்ரகள் ஆக்குகிறான் என்பதுதானே! இது ஒரு மாபெரும் உரிமை பறிப்பு!

இந்த நாட்டின் சாமானிய குடிமகன் ஒருவன் அன்றாடம் சாப்பிட ஆகாரம் இல்லாமல் தவிக்கிறான். தனது குழந்தைக்கு ஒரு நல்ல சூழலில் கல்வி கொடுக்க முடியாமல் புழுங்குகிறான். ஒரு வீடு இல்லாமல், ஒரு வாகனம் இல்லாமல், அன்றாட தேவைகளுக்கே அல்லாடும் ஒரு இழி நிலையில் கிடந்து உழலுகிறான். ஏன் இந்த நிலை?

வேலையும் உற்பத்திப் பொருளும், வசதியும் வாய்ப்புக்களும் இங்கு வாழும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது இல்லை. அவை ஒரு குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டுமே சென்று சேரும்படி நமது சமூக அமைப்பை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கின்றன சில சக்திகள். அந்த சக்திகளிடம்தான் லட்சக் கண்க்கான கோடி ரூபாய்கள் சென்று குவிகின்றன.

சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் இரண்டு தனி நபர்கள்தான். அந்த நபர்களின் சொத்துக்கள் மட்டும் 120 லட்சம் கோடிகள் என்றால் அந்த சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? அவர்கள் செய்த தொழில் என்ன? அவர்களுடைய நிரூபிக்கப்பட்ட ஆண்டு வருமானம் எவ்வளவு?

வர்த்தகதுறை அமைச்சராக, நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராக, இந்த நாட்டின் உயர் பதவிகளை வகித்த ப,சிதம்பரம் அந்தப் பதவிகளை பயன்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளை அடித்து கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பணத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்தியாவுக்கு வெளியே பதினான்கு நாடுகளில் சொத்துக்களை வாங்கி இந்தியாவின் செல்வத்தை வெளி நாடுகளில் முடக்கி வைத்து இருக்கிறார். இவர்தான் மிஸ்டர் வொய்ட்டா? இவர்தான் உத்தமரா? இவர் குற்றவாளி இல்லையா? இவர் கொள்ளைக்காரர் இல்லையா? இவர் தேச துரோகி இல்லையா? இவர் தண்டிக்கப்படுவது கூடாதா?

இங்கு உழைப்பவன் ஊனமாகி வருவதும் ஊரை ஏய்ப்பவன் ஒய்யாரமாக வாழ்ந்து வருவதும் எதனால்? எதனால் என்றால் பணத்துக்கு உரிமை உடையவன் இங்கே ஊமையாக் இருப்பதால்தான். ஒருவனிடம் அளவுக்கு அதிகமாக உயரும் சொத்து யாருடையது என்று மக்கள் கேள்விம் கேட்காமல் இருப்பதால்தான்.

தனது குடும்பம் சாப்பிடாம் இருக்கும்போதும், தனது பிள்ளையை பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வழி இல்லாமல் இருக்கும்போதும் அவர்கள் கோடிகளில் விளையாடுவதைப் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கும் நாம்தான் காரணம்.

அரசியல்வாதிகளுக்கு ஏன் இவ்வளவு சொத்துக்கள் என்று கேள்வி கேட்கப் படாதவரை இந்த நாட்டில் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவதையும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளை ஆவதையும் தடுக்கவே முடியாது என்கிறார் தொல்காப்பியன்.