TNPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்திய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி Tnpl தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .


திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது . அந்த அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜு  அபாரமாக விளையாடி 81 ரன்களை விளாசினார் . பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி  தோல்வியை தழுவியது .இதனால் சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணி டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது . 

நேற்று நடந்த எலிமினேட்டர் 1 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன் அணியை  வென்றது . 

நாளை நடைபெற உள்ள qualifier 2 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதவுள்ளன . இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சேப்பாக்  சூப்பர் கில்லிஸ் அணியுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது .