மயிலாப்பூரில் ஒரே நாளில் ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா..! 6 மாத குழந்தையும் பாதிக்கப்பட்ட பரிதாபம்! எப்படி தெரியுமா?

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தெருவில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.


சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சுமார் 13 பேர் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மயிலாப்பூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவர் வசித்த பகுதியில் அதிகாரிகள் பொதுமக்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர். இதில் அந்த தூய்மை பணியாளர் வசித்து வந்த தெருவில் அடுத்தடுத்த வீடுகளை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இவர்களில் ஆறு மாத குழந்தை, ஒரு வயது குழந்தையும் அடங்கும். ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் உடனடியாக மீனாம்பாள்புரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மேலும் பலரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே தெருவில் 16பேருக்கு கொரோனா பரவியுள்ளது முதல்முறையாகும். இதனால் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.