சென்னை, மதுரையில் முழு ஊரடங்கு வாபஸ்..! ஆனால் ஊரடங்கு தொடரும்..! எப்படி தெரியுமா? எடப்பாடியார் அறிவிப்பு!

சென்னை, மதுரையில் அமலில் உள்ள முழு ஊரடங்கு திரும்பபெறப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 19ந் தேதி முதல் சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அருகாமை மாவட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் வீட்டை விட்டு வெளியே வர யாருக்கும் அனுமதி இல்லை. கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

இந்த முழு ஊரடங்கு வரும் 5ந் தேதியுடன் திரும்ப பெறப்படுகிறது. அதே சமயம் 6ந் தேதியில் இருநது பழைய ஊரடங்கு நீடிக்கும். முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளுடன் வரும் 31ந் தேதி வரை ஊரடங்கு சென்னை, மதுரையிலும் நீடிக்கும். ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் தேனீர் கடைகள் உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட அனுமதி!