உள்ள என்னடா பண்ணிகிட்டு இருக்கீங்க? ஜன்னல் வழியாக எட்டி பார்த்த சிறுத்தை! அதிர்ச்சியில் உறைந்த வீட்டில் இருந்தவர்கள்! எங்கு தெரியுமா?

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மனிதர்களை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் காத்திருந்தும் நேரம் மட்டுமே வீணானதால் சோகத்தோடு திரும்பிச் சென்றது.


நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மனமகிழ்மன்றம் என அழைக்கப்படும் கிளப். இது நீலகிரி மாவட்டத்தில் அடையாளம் காணப்படுபவைகளில் ஒன்றாகும். 1885 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது கிளப்பில் தற்போது 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது.

இந்நிலையில் நேற்று கிளப்பில் உறுப்பினர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களை வேட்டையாட ஒரு சிறுத்தை வந்தது. அங்கே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சிறுத்தை எப்படியாகவது உள்ளே செல்லாம் என முயற்சி செய்தது. இதைப் பார்த்த உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனாலும், ஜன்னல் கண்ணாடி கதவுகளை திறக்காமல் அமைதியாக இருந்தனர்.

ஊழியர்கள் சிலர் அந்த சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நிறைவேறவில்லை. எப்படியாவது ஒருவராது வெளியில் வருவார்கள் கடித்து குதறலாம் என காத்திருந்த சிறுத்தைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் உணவைத் தேடி அங்கிருந்து வேறு இடத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.