ராகுலின் தாடி டிரிம்மிங் வேற லெவல்

தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் வெளியான நேரத்தில், ராகுல் காந்தி திடீரென ஒரு முடி திருத்தும் கடையில் நுழைந்து தாடியை டிரிம் செய்துகொண்டது வேற லெவலுக்கு பெரும் வைரலாகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி கடந்த மே 3ல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து சென்றவர், நேற்று முதன்முறையாக பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரக் கூட்டம் மஹராஜ்கன்சில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ரேபரேலி நகரின் பிரிஜேந்தர் நகர் வழியாக ராகுல் தனது குடியிருப்பிற்கு திரும்பினார். அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்தி ராகுல் செய்த அதிரடி செயல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள பைஸ்வாரா கல்லூரியின் முன், ’மிதுன் சலூன்’ எனும் பெயரில் ஒரு முடிதிருத்தும் கடை உள்ளது. இதனுள் திடீர் என நுழைந்தவரை கண்டு உள்ளே இருந்த பணியாளர் வியப்படைந்தார். நேராக முடிதிருத்துவதற்கான நாற்காலியில் அமர்ந்த ராகுல், தம் தாடியை வெட்டி சரிசெய்யும்படி கூறினார். அந்த நாற்காலியை ராகுலின் பாதுகாப்பு படையினர் சூழ்ந்தபடி நின்றனர். பிறகு தம் தாடியை வெட்டி சரிசெய்துகொண்ட ராகுலின் முகத்தில் அனைவரையும் போல் நீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முகத்தின் நீரை தம் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் ராகுல். இதற்குமுன் அவர், முடிதிருத்துபவருக்கு கொடுத்த கட்டணம் ரூ.500. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.