130 கோடி மக்களின் இதயம் நொறுங்கியது..! சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கவில்லை..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரனை ஆராய அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த ஜூலை 23ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. 

இன்று அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆய்வூர்தி பிரக்யான் நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நிலவில் தரையிறங்கும் இந்தியாவின் விண்கலத்தை நேரடியாக பார்வையிட உலகமே காத்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் சென்று விஞ்ஞானிகளுடன் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நிலவில் தரையிறங்கும் நேரமான 1.55ஐ கடந்த பிறகும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அமைதியாக இருந்தனர். அந்த அறையே சோகமயமாக காட்சி அளித்தது. திடீரென இஸ்ரோ தலைவர் பிரதர் மோடியிடம் சென்று ஏதோ கூறினார்.

அதனை தொடர்ந்து நிலவின் தரையில் இருந்து 2.1 கி.மீ தொலைவை அடைந்த பிறகு விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக சிவன் அறிவித்தார். இதற்கான காரணத்தையும், தரவுகளையும் ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் சந்திரயான் 2 திட்டம் எதிர்பார்த்தபடி நிலவில் தரையிறங்கவில்லை என்பது தெரியவருகிறது.