என்ன வேணாலும் பண்ணிக்கோங்க.. நாங்க சொன்னது சொன்னதுதான்.. கொள்கையில் பின்வாங்க மாட்டோம் - அமித்ஷா அதிரடி..!

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மட்டும் திரும்ப பெற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்ற போது அதிரடியாக கூறியிருக்கிறார்.


கடந்த 9-ம் தேதி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து வட மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் வன்முறைகள் என நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கில் அரசானது இணைய சேவையும் தொலைத்தொடர்பு சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் இந்த போராட்டங்களை மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் பங்கேற்று இருந்தார் . அப்போது பங்கேற்று பேசிய அவர், என்ன வேண்டும் என்றாலும் நடக்கட்டும், மோடி அரசால் இயற்றப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது உறுதி என்று அவர் கூறினார். இதனை எதிர்த்து யார் போராடினாலும் மோடி அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற இயலாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த ஒரு தீங்கும் இந்த மசோதா அளிக்காது என்பது உண்மை என்றும் அமித்ஷா கூறினார். மேலும் பேசிய அவர் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்துப் போராடும் எவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் உறுதியளித்தார்.