ஊரடங்கு முடிந்து ஏப்ரல் 14க்கு பிறகு உறுதியாக நடக்கப்போவது இது தான்..! என்ன தெரியுமா?

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் மக்களின் மனதில் தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து கிட்டத்தட்ட உறுதியாக எடுக்கப்பட்ட தகவல்களை தற்போது நாம் இந்த செய்தியில் காண்போம்.

தமிழகத்தில் தற்போது தான் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றாமல் இருப்பது அரசுக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளது.

இதனால் இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையில், ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயம் இயல்புநிலைக்கு மாநிலங்கள் மாறி விடக்கூடாது என்று என்பதில் முதலமைச்சர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய அறிவுரைகளுக்கு பின்னர்தான் தமிழக முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துமாறு காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்.

அதன்படி 14ம் தேதிக்கு பிறகும் தமிழக மக்கள் ஊரடங்கு சந்திக்க நேரிடும் என்று தெரியவருகிறது. மேலும் அதன் பிறகும் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.