ரூ.50 லட்சம் மதிப்பு நிலம்..! அபகரிக்க முயற்சிக்கும் திமுக எம்பி..! கதறும் ஏழை தம்பதி!

திமுக எம்பி ஞான திரவியம், தனக்கு சொந்தமான 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயல்வதாக நிலத்தின் சொந்தக்காரர் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் குமாரி பகவதி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிப்பதற்காக தொடர்ந்து தன்னிடம் சிலர் பிரச்சினை செய்து வருவதாக கூறியிருக்கிறார். இது குறித்து இன்றைய தினம் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அந்த புகாரில், என்னுடைய பெயர் குமாரி பகவதி. நெல்லை மாவட்டத்தில் எனக்கு சொந்தமாக ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை திமுக எம்பி ஞானதிரவியம் அபகரிக்க முயற்சி செய்கிறார். மேலும் நிலத்தை பெறுவதற்காக தொடர்ந்து அவர் என்னையும் எனது குடும்பத்தாரையும் அச்சுறுத்தி வருகிறார். ஆகையால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் எங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.