பெரியார் பற்றிய சர்ச்சை கருத்து! நடிகர் ரஜினி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

நடந்துமுடிந்த துக்ளக் விழாவில் பேசும்போது, தந்தை பெரியார் பற்றி தவறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.


கடந்த ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் இதழின் 50வது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவரது பேசும்பொழுது கடந்த 1971-ல் நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது இதனையடுத்து பலரும் நடிகர் ரஜினிகாந்தின் மீது போலீசில் புகார் அளித்தனர் மேலும் அவர் இவ்வாறாக தந்தை பெரியாரைப் பற்றி தவறாக கருத்துக்கள் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து ரஜினிகாந்த் தான் பேசியது நிதர்சனமான உண்மை வேண்டும் .அதற்கு வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க இயலாது வரணும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதைப் பற்றி கட்சி தலைவர்களும் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த சர்ச்சை குறித்தும் வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு போட்டுள்ளார். கூடிய விரைவில் உமாபதி போட்ட இந்த வழக்கும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.