3 பேரை கல்யாணம் செஞ்சேன்..! ஒரு குழந்தை பிறந்தது..! இப்போது 4வதா ஒரு ஆள் வந்து நான் தான் அப்பாங்கிகறார்..! இளம்பெண் வெளியிட்ட பகீர் தகவல்!

ராமநாதபுரத்தில் 3 பேரை திருமணம் செய்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை நான்காவதாக வந்த இன்னொரு நபருக்கு சொந்தமானது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது தனக்கு பிறந்த குழந்தையை விற்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் அந்த பெண்ணிற்கு குழந்தைகள் நல அலுவலகத்திற்கு வந்த ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டது.

அப்படியாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ஆஜரான அந்த பெண்ணிடம் பல விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது. விசாரணையில் அந்த பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிய வந்தது.

மேலும் அந்தப் பெண் அதே பகுதியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். கட்டிட வேலை பார்க்கும் பொழுது தன்னுடன் பணிபுரிந்த வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பழக்கம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே சண்டை ஏற்பட்டு அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்.

விவாகரத்தான அந்தப் பெண் தன் கள்ளக் காதலனான வினோத் உடன் சேர்ந்து தனியே வாழ துவங்கி இருக்கிறார். சிலகாலம் வினோத்தும் அந்த பெண்ணும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர் .பின்னர் வினோத்திற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.

பணி நிமித்தமாக வெளிநாட்டுக்கு சென்ற வினோத் அங்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக அந்த பெண்ணிற்கு தகவல் கிடைத்தது. வினோத் இறந்ததாக தகவல் கிடைத்தால் நான்கு மாதங்கள் அந்தப் பெண் மூன்றாவதாக மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்தப் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அந்த பெண் குழந்தையை வினோத்திற்கு பெற்றதாக கூறி வினோத்தின் உறவினர்கள் அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளனர். இதனால் அந்த பெண் வினோத்தின் உறவினர்களிடம் அந்த பெண் குழந்தையை கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

அந்தப் பெண் குழந்தை நாலாவதாக சரத் என்பவர் உடையது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சரத் அந்தப் பெண் குழந்தை தன்னுடையது என்றும் அதனை அந்த பெண் விற்று விட்டதாகவும் குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது வினோத் வேலைக்காக வெளிநாடு சென்ற பொழுது அந்த பெண்ணுடன் பழகி இந்த குழந்தை உருவானதாக சரத் தன்னுடைய புகாரில் கூறியிருக்கிறார்.

இதனால் குழம்பி தலைசுற்றி போன அதிகாரிகள் அந்த பெண்ணை விசாரித்த போது இந்த குழந்தை என்னுடையதுதான் என்றும் அதற்கும் சரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறியிருக்கிறார் இருப்பினும் அதிகாரிகள் தெளிவான முடிவு தெரிய வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணையும் சாரத்தையும் அந்த குழந்தையையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு பரிந்துரைத்துள்ளனர். 

இந்தப் பரிசோதனையின் முடிவில் அந்த குழந்தை யாருடையது என்பது தெரிந்துவிடும்.