மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு எதிராக அவசர வழக்கு! உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை!

மகாராஷ்டிராவில் உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று பதவியேற்றுக்கொண்ட பட்னாவிஸ் அரசுக்கு எதிரான அவசர வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத வண்ணம் நேற்று காலை தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக்கொண்டார். 

மகாராஷ்டிராவில் காங்கிரஸ்,சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக்கொண்டார். 

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக சிவசேனா ,காங்கிரஸ் ,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேற்று அவசர வழக்கு தொடர்ந்தது. மேலும் பாஜக பெரும்பான்மை இன்று நிரூபிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று காலை 11:30 மணிக்கு அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது.