கொரானா வைரஸ் காலர் டியூனுக்கு தடை..!? உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் சமூக விளக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் கடுமையாக பாதித்துள்ளனர்.

அரசாங்கம் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய பங்கிற்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கால் செய்த முதல் 30 வினாடிகளுக்கு தொடங்கும் விழிப்புணர்வு ட்யூண் கேட்கும். அதன் பின்னர் தான் அழைப்பு செல்லும்.

ஒவ்வொரு முறையும் இதுபோன்று கேட்பதற்கு பொதுமக்களுக்கு எரிச்சலாகி வருகிறது. ஆனால் இதனை முற்றிலும் நிறுத்த இயலாது. மாறாக ஸ்கிப் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். "கொரோனா வைரஸ் காலர் டியூன் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. மீண்டும் மீண்டும் அதே காலர் டியூனை கேட்பதன் மூலம் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பல்வேறு வழிமுறைகள் இருக்கும்போது, காலர் ட்யூண் எதற்கு. இருமலுடன் கூடிய காலர் டியூன் எதற்கு. மக்களின் அமைதியான வாழ்வை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதால், இந்த காலர் டியூனை நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கானது தற்போது நீதிமன்றத்தில் முன்னிலை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.