பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கார் விபத்துக்குள்ளான சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசுர வேகம்! திடீர் சடன் பிரேக்..! பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்த சொகுசு கார்! வேலூர் பரபரப்பு!
வேலூர் மாவட்டத்தில் பழைய பாலாற்று பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார். ஆனாலும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த விபத்தானது பழைய பாலாற்று பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.