படுவேகம்! திடீரென பிரேக் கட்! SRM மாணவர்களுடன் ஆற்றில் பாய்ந்த கார்! ஆனாலும் நிகழ்ந்த அதிசயம்!

பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் கார் மூழ்கிய விபத்தில் 2 மாணவர்கள் கிடைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடபழனி எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விறுக்குமார் மற்றும் அஜய் ஆகியோர் 3-ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அக்கரை கடற்கரைக்கு செல்வதற்கு திட்டமிட்டனர். திட்டமிட்டபடி காரில் இருவரும் புறப்பட்டனர்.

சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரின் எஞ்சின் அணைந்துவிட்டது. மேலும் காரின் பிரேக்கும் வேலை செய்யவில்லை. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது யார் மீதும் மோதி விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடனிருந்த விறுக்குமார் காரை வலது புறமாக திருப்பினார்.

துரதிஷ்டவசமாக சாலையோரத்தில் இருந்த புதருக்குள் கார் சிக்கிக்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 இளைஞர்களும் உயிர் தப்பினர். காரின் கதவை திறந்து நீச்சலடித்து அவர்கள் வெளியேறினர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த செம்மஞ்சேரி காவல்துறையினர் கால்வாயிலிருந்து மிகவும் சிரமப்பட்டு காரை மீட்டனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 இளைஞர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.