காரும், அரசு பேருந்தும் எதிரெதிரே மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் பலியான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமத்தாக சென்ற பேருந்து! தருதலை போல் பாய்ந்து மோதிய கார்! பிறந்த குழந்தையை பார்க்கச் சென்ற தந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடலூரிலிருந்து இன்று அதிகாலை புதுச்சேரிக்கு கார் ஓட்டி சென்று கொண்டிருந்தார். கிருமாம்பாக்கம் பகுதிக்கு அருகே தனியார் கார் நிறுவனம் ஒன்று தடுப்புக்கட்டையை வைத்திருந்தது.
அந்தக் கட்டியின் மீது மோதியதில் பத்மநாபன் கட்டுப்பாட்டை இழந்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
மோதிய அதிர்ச்சியில் பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பத்மநாபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.