அசுர வேகம்..! திடீரென எதிரே வந்த லாரி! நேருக்கு நேர் மோதி சிதைந்த கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு நேர்ந்த துயரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நவாப்கஞ்ச் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இன்று காலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய காரில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் பயணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பமாக சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த காரில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்து ஏற்பட்டவுடன் கார் முற்றிலும் சேதமடைந்து லாரியின் அடிப்பாகத்தில் சென்று மாட்டிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து வெட்டும் இயந்திரத்தின் உதவியுடன் காரின் பாகங்களை ஏற்றிய பின்னர் தான் விபத்தில் சிக்கிய உடல்களை போலீசார் கைப்பற்றினர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விபத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.