நீ அவர் கூட போ..! நல்லா பார்த்துப்பார்! மருமகளை கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய விபரீத மாமியார்..! தூத்துக்குடி திகுதிகு!

கார் கொள்ளையன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கல்குவாரியில் வீசப்பட்டிருந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ராஜபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 40. இவர் அப்பகுதிகளில் கார் திருடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது ஏராளமான கார் திருட்டு வழக்குகள் காவல் நிலையத்தில் இருந்தன.

இதனிடையே இவர், தனக்கு திருடுவதற்காக துப்புக்கொடுக்கும் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக ராஜபாண்டி காணவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதனிடையே தட்டப்பாறை பகுதியில உள்ள கல்குவாரியில் ஆடையின்றி ஒரு ஆணின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது.

உடனடியாக காவல்துறையினர் துப்புக் கொடுக்கும் பெண்ணிடம்  சென்று அவருடைய மகனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் புதியம்புத்தூரில் சித்ரா என்ற பெண்ணுடன் மகன் வசித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் புதியம்புத்தூர் ஊருக்கு சென்று சித்ராவிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

கார் திருடுவதற்கு துப்பு கொடுக்கும் பெண்ணின் மகன் ஒரு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே வேலை பார்த்து வநத் சித்ரா என்ற பெண்ணின் மீது ஆசைப்பட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மீண்டும் எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்றதால் சித்ரா தன்னுடைய மாமியாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, ராஜபாண்டி அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 4-வதாக சித்ராவை காதலித்த ராஜபாண்டி தான் திருடிய பணத்தை அவரிடமும், துப்பு கொடுக்கும் பெண்ணிடமும் வாரி இறைத்துள்ளார். மகன் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்த பெண் என்று கூட பாராமல் பணத்திற்காக சித்ராவின் மாமியார், சித்ராவை ராஜபாண்டியுடன் அனுப்பி வைத்தார். ராஜபாண்டியும், சித்ராவும் புதியம்புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கார் திருடுவதற்கு ராஜபாண்டிக்கு உதவி செய்யும் ராமர் மற்றும் சக்திவேல் ஆகியோர் புதியம்புத்தூர் வீட்டிற்கு அடிக்கடி வந்த வண்ணம் இருந்தனர். அப்போது சித்ரா சக்திவேலுக்கு காதல் ஆசையை வளர்த்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி சக்திவேலை தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட ராஜபாண்டி ஒருநாள் குடிபோதையில் வந்து சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சித்ராவை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

ஒன்றாக வாழ வேண்டுமென்றால் ராஜபாண்டி உயிருடன் இருக்கக்கூடாது என்று சித்ரா சக்திவேலிடம் கூறியுள்ளார். சம்பவத்தன்று சித்ரா,ராமர், சக்திவேல் ஆகிய அனைவரும் ஒரே வீட்டில் இருந்ததை கண்டு ராஜபாண்டி ஆத்திரம் அடைந்துள்ளார். தன்னிடம் இருந்த அரிவாளால் சக்திவேலை வெட்ட முயன்றபோது, தடுக்க வந்த ராமரின் காலில் வெட்டு விழுந்தது.

பின்னர் சக்திவேலும், சித்ராவும் ராஜபாண்டி மடக்கிப் பிடித்து அதே அரிவாளால் அவருடைய தலையை துண்டாக வெட்டி உள்ளனர். தலையை பிளாஸ்டிக் பையில் போட்டும், தலையில்லா உடலை காரில் ஏற்றிச்சென்று தட்டப்பாறை கல்குவாரியில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

காலில் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமரை சித்ராவின் வாக்குமூலத்தை வைத்து காவல்துறையினர் பிடித்தனர். தலைமறைவாகியுள்ள சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.