குண்டு எடையைக் குறைக்கும் குடை மிளகாய் !!

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் குடை மிளகாயில் உடலுக்கு மிகவும் பயனுள்ள பல சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. வைட்டமின் சி கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்கள் நிரம்பியுள்ளன.


·         குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல முறையில் பயனளிக்கும்.

·         வைட்டமின் சி சத்து இருப்பதால் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதைக் குறைக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது என்பதால் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது.