ரூ.5 கோடி மதிப்பு கைக்கடிகாரம்! ஒரே ஒரு சிகரெட்டால் பறிபோன பரிதாபம்! அதிர வைக்கும் சம்பவம்!

சிகரெட் கேட்பது போன்று பாவித்து விலையுயர்ந்த கைகடிகாரம் திருடப்பட்டுள்ள சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் என்ற 5 ஸ்டார் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. வேலை நிமித்தமாக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தங்கியிருந்தார். சிகரெட் கிடைப்பதற்காக ஓட்டலின் வெளியே வந்துள்ளார்.

அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், அவரிடம் மிகவும் இனிமையாக பேசியுள்ளார். பின்னர் ஜப்பானியரிடம் சிகரெட் கேட்டுள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவரும் அவருக்கு சிகரெட்டை அளித்துள்ளார்.

அதன் பின்னர் கைகுலுக்கிய போது, ஜப்பானியரின் கையில் கட்டப்பட்டிருந்த வைரக்கல் பதிந்த "ரிச்சர்ட் மில்லே" கை கடிகாரத்தை நைசாக திருடியுள்ளார். ஆனால் தவறுதலாக தன்னுடைய செல்போனை ஜப்பானியரிடம் வழங்கி சென்றுள்ளார்.

சில மணி நேரம் கழித்து கையில் கடிகாரம் இல்லாததை உணர்ந்த ஜப்பானியர், அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் தன்னிடம் இருந்த மர்ம நபரின் செல்போனையும் காவல்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளார்‌. 

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரனையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது