“பத்திரப் பதிவு முடிந்தவுடன் அதனுடன் பட்டா மாறுதல் செய்ய பல காலமாக பயனாளர்களிடம் ஒரு தொகை வசூல் செய்யப்பட்டநிலையிலும் இதுநாள்வரை அந்த பணி தன்னிச்சையாக நடைபெறாமலேயே இருந்து வந்தது.
எளிய வகையில் பட்டா வாங்கும் அரசு சட்டத்துக்கு எதிராக கிராம நிர்வாக அதிகாரிகள் நிற்கலாமா..? அரசை எதிர்ப்பவர்களுக்கு என்ன தண்டனை?
பல தரப்பட்ட கோரிக்கைகள் , நீதி மன்ற கண்டிப்பு ஆகியவற்றிற்கு பின் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சமீபத்தில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது..
ஆனால் இந்த சட்டத்துக்கு VAO க்கள் கடும் எதிர்ப்பு தெவிவிக்கின்றனர். இதனை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும், வேலைப்பளு அதிகம் என்று இதனை எதிர்க்கின்றனர்.
.அரசு ஒரு திட்டமாக அறிவித்துவிட்டபின் அது தவறாகவோ / அவ்வளவு ஏன் மக்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் ஒரு ஊழியன் என்ற முறையில் செயல்படுத்துவதுதான் தலையாய கடமை. இதற்கு முன்கூட அரசாங்கம் இ- அடங்கல் முறையை செயல்படுத்த அறிவுறுத்தியபின்பும் கடும் போராட்டத்திற்கு பின்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகளை கம்யூட்டர்' யுகத்தில் விரைவில் செய்து கொடுக்கவே விரும்பும். அதற்கு அரசு இயந்திரத்தின் ஒரு சக்கரமான அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். பணம் காய்க்கும் மரமாக மக்களை நினைக்காமல், எளிய முறையில் பட்டா சென்றடைய வழி வகுக்க வேண்டுமே தவிர, போராட்டம் நடத்தக்கூடாது என்பதுதான் மக்கள் கோரிக்கை.
அரசு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வி.ஏ.ஓ.க்களை பதவியில் இருந்து தூக்கிவிடுவோம் என்று அரசு மிரட்டினாலே, எல்லாம் சரியாய் போய்விடும். செய்யுமா அரசு?