பணம் இருந்தால்தான் நீட் வெல்ல முடியுமா? சோயப்தான் உதாரணம்…

நீட் தேர்வு வந்துவிட்டால் ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என்ற கனவு எட்டாக் கனவாகவே மாறிவிட்டது. ஆம், நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் லட்சங்களில் செலவு செய்தே அந்த இடத்தைப் பிடித்துள்ளனர். இதுகுறித்த வைரலாகும் பதிவு இது.


இந்த வருடம் NEET -ல் topper ஆக வந்த ஒடிசாவை சேர்ந்த சோயப் என்ற மாணவரின் பேட்டியை பார்த்தால் அவர் 2018-ல் இருந்து சொந்த ஊருக்கே செல்லாமல் 3 வருடம் ராஜஸ்தானில் உள்ள kota coaching center இல் படித்தவராம். இதற்காக தாய் மற்றும் சகோதரியுடன் சொந்த ஊரில் இருந்து ராஜஸ்தான் சென்று அங்கே வாடகைக்கு வீடு எடுத்து 3 வருடம் படித்து இருக்கிறார். 

ஜீவித்குமார் NEET-ல் 2019-ல் எடுத்த 193-க்கும் 2020-ல் எடுத்த 664-க்கும் ஒரே வித்தியாசம் பணபலத்தால் கிடைக்கும் சிறப்பு coaching center அனுபவமே ஒழிய படிப்பு திறனிலோ யோசிக்கும் திறனிலோ அல்லது problem solving திறனிலோ அல்ல. 

சென்ற வருடம் சமச்சீர் "தரம் கெட்ட" கல்வியால் பாதிக்க பட்ட ஜீவித்குமார் இந்த வருடம் பல ஆயிரம் இல்லை சில லட்சம் செலவு செய்து சிறப்பு coaching center தரமான கல்வியால் தன் நிலையை உயர்த்தி கொண்டார் என்று எவனாவது சொன்னால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவன் வாயை உடையுங்கள். அனிதாவிற்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்து இருந்தால் 86-ல் இருந்து 650 கூட பெற்றிருக்கலாம். இப்படி ஒவ்வொரு அனிதாவும் ஜீவித்குமாரும் பல லட்சங்கள் செலவு செய்து தான் மருத்துவர் ஆக முடியும் என்று இருந்த நிலையை மாற்றி தான் தமிழ்நாடு மருத்துவ கல்வியை சமூகத்தின் எல்லா நிலையிலும் உள்ள மக்களுக்கும் கிடைக்குமாறு செய்தது. அதை தடுத்து வெறும் பணக்காரர்களுக்கும் coaching center களுக்கும் மட்டுமே பயன்படுமாறு மாற்றியது யாருடைய சதி?

சோயப் பேட்டியில் பொதுவாக எல்லா topper களும் எப்போதும் சொல்வது மாதிரி மருத்துவர் ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொல்லி இருக்கிறார். 

தம்பி - அப்படி உண்மையாவே செய்யணும்னா இந்த NEET எவ்வளவு கொடூரமான மோசடி தேர்வு முறை என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டு. சொந்த ஊரை விட்டு பல வருடம் வெளியில் வாடகைக்கு தங்கி இருந்து குடும்பத்தாரையும் கூட கூட்டி வைத்து சில லட்சம் செலவு coaching centre -ல் படித்தால் மட்டுமே சிறந்த மதிப்பெண் பெற்று மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்ற உண்மையை பரப்பி விடு. ஏழை எளிய மக்களில் இருந்து தானாகவே மருத்துவம் படிக்க வந்து அவர்களுக்கு சேவை செய்து கொள்வார்கள். நீ கஷ்டப்பட தேவை இல்லை.