இளம்பெண் முன் ஆபாச வசவு! போலீஸ் செயலால் இளைஞரின் விபரீத முடிவு!

ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ் இவர் சென்னை ராமாபுரத்தில் இருக்கக்கூடிய டி.எல்.எப் கால் டாக்ஸி ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.


 இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அண்ணா நகர் பாடி அருகே பணிக்கு செல்லக்கூடிய நபர்களை ஏற்றுவதற்காக சாலையில் காத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இரு காவல்துறையினர் அவரை தகாத வார்த்தையில் கடுமையாக திட்டி உள்ளனர்.

காரில் dlfல் பணி புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் இருக்க போக்குவரத்துக் காவலரின் அந்த தகாத வார்த்தைகளை தாங்கமுடியாமல் அன்று மாலை மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில் தலைவைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

மேலும் இது குறித்து விசாரித்த காவல்துறை ராஜேஷின் மொபைலை பார்மட் செய்து  அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராஜேஷின் இறப்பில் மர்மம் இருப்பதாக உணர்ந்த அவரின் பெற்றோர் மொபைலை பேக்கப் எடுக்கும் போது ராஜேஷ் தனது தற்கொலை வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது

இந்த வீடியோவில் மிகுந்த மன குமுறலுடன் பேசும் ராஜேஷ் தன்னுடைய சாவிற்கு  காவல்துறை தான் காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க எனது சாவே கடைசியாக இருக்கட்டும் என உருக்கமாக தனது இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு தரமணி அருகே தகாத வார்த்தையினால் தொலைபேசியை எடுத்து மணிகண்டன் என்ற  கால் டாக்சி ஓட்டுநர் தீக்குளித்து இறந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.