முழு போதை..! காரில் அதிவேகம்! 2 பேரை அடித்து தூக்கி கொலை செய்து செல்ஃபி எடுத்த சாஃப்ட்வேர் என்ஜினியர்! அதிர வைத்த சம்பவம்!

குடிபோதையில் காரில் அதிவேகமாக சென்ற சாப்ட்வேர் இஞ்சினியர் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார்.


காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அபிலாஷ் என்ற இளைஞர் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு குடிபோதையில் தன்னுடைய காரில் வந்துள்ளார் . அவருடன் நண்பர்கள் இருவரும் பயணித்து வந்துள்ளனர். இவர்கள் வந்த கார் லங்கர் ரவுஸ் பகுதியிலுள்ள பயோடைவர்சிட்டி பாலத்தின் மேல் வரும் பொழுது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரமாக நின்றிருந்த இளைஞர்கள் இருவர் மீது மோதியது . அந்த இளைஞர்கள் இருவரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் ஐடி ஊழியர் அபிலாஷ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த இளைஞர்கள் வம்சி மற்றும் பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அபிலாஷ் மற்றும் அவருடன் பயணித்த நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிக்க முயற்சி செய்தனர் அந்நேரத்தில் அந்த பகுதியில் இருந்து வந்த மக்கள் இவர்களின் காரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் அபிலாசை தயவுசெய்து அபிலாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அபிலாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அபிலாஷின் மேல் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி (ஐபிசி) பிரிவு 304-ஏ (மரணத்தை ஏற்படுத்தும் அலட்சியம்) இன் கீழ் ராயதுர்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது, ​​அபிலாஷ் தான் காரை ஓட்டவில்லை என்று முதலில் மறுத்தார், ஆனால் பின்னர் ஒப்புக்கொண்டார்.