ஒரே நாளில் 7 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் CTS சாப்ட்வேர் கம்பெனி! அதிர வைக்கும் காரணம்!

இந்தியாவிலேயே இரண்டாவதாக மிகப்பெரிய ஐடி நிறுவனமாக கருதப்படுவது சீடிஎஸ் என்று அழைக்கப்படும் காக்னிசன்ட் நிறுவனம்.


மிகப்பெரிய ஐடி நிறுவனமான சீடிஎஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இலிருந்து சுமார் 10000 முதல் 12000 பணியாளர்கள் வரை வேலையில் இருந்து நீக்க போவதாக அந் நிறுவனத்தின் CEO அறிவித்துள்ளார்.

காக்னிசன்ட் நிறுவனத்தின் CEO பிரைன் அம்பைஅர்ஸ் பேசுகையில் தான் சிறந்த வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் 5000 பேருக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இதன் விளைவாக 5000 இருந்து 7000 பேர் வரை வரை தங்களுடைய பணியை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

கம்பெனியின் செலவை குறைக்கும் நோக்கில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருந்ததாகவும் பிரைன் கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் பிரைன் பேசும்போது இந்தியாவிலேயே 2 லட்சம் ஊழியர்களை கொண்டு இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவன மாக சீடிஎஸ் நிறுவனம் திகழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் முதலிடத்தில் TCS நிறுவனம் 4 லட்சம் ஊழியர்களோடு முதலிடத்தில் உள்ளது. 

பணியில் இருந்து எடுக்கப்படும் சீடிஎஸ் ஊழியர்களில் சில பேர் சீடிஎஸ் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் மற்ற நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார். முக்கியமாக காக்னிசன்ட் மிகவும் பிரபலமான பேஸ்புக் நிறுவனத்துடன் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காக்னிசன்ட் நிறுவனம்கடந்த செப்டம்பர் மாதம் தங்களுடைய லாபமாக 497 டாலர்களை ஈன்றது. சராசரியாக இந்த நிறுவனத்தின் லாபமானது 4.5 %இல் இருந்து 4.25 பில்லியன் டாலராக மாறியுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான வருவாயாக 4.9% பெறவேண்டுமென்று சீடிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகதங்களுடைய செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பணியாளர்களை வேலையில் இருந்து வெளியே அனுப்பும் முடிவில் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக தங்களுடைய வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் அவர்கள் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.