சேப்பாக்கத்தை அதிர வைத்த தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னா! பதிலடி கொடுப்பாரா ரிஷாப் பாண்ட்?

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதல் 10 ஓவர்களுக்கு சென்னை அணி 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களுக்கு சென்னை அணி 126 ரன்களை குவித்து 20 ஓவர்களுக்கு 179 ரன்களை எடுத்தது.

சின்ன தல ரெய்னா சிறப்பாக விளையாடி 59 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 10 பந்துகளுக்கு 25 ரன்களை அதிரடியாக அடித்து எதிரணியை மிரட்டினார். 16 ஓவர் வரை பொறுமையாக ஆடிய தோனி கடைசி 4 ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இவர் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.