டியர் உன்னை அனுபவிக்க வேண்டும்! பெண் அதிகாரிக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய உயர் அதிகாரி!

சென்னையில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவருக்கு மூத்த அதிகாரி பாலியல் தொல்லைகள் அளித்து வந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்று கூறப்படும் சிஎம்டிஏ (CMDA) எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்தார். குடும்பத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் இளம்பெண்ணிற்கு பாலியல் ரீதியில் தொல்லைகளை அளித்துள்ளார்.

முதலில் வாட்ஸ்அப்பில் , "டியர்"(dear) எனக் கூறத் தொடங்கினார். அந்தப் பெண்ணோ இவர் தன்னுடைய மேலதிகாரி என்பதால் எதிர்ப்பைக் காட்ட இயலாமல் "சார்" என்று அழைத்துள்ளார். ஒரு சில நாட்களில் அவர் மிகவும் அத்துமீறி பேச தொடங்கியுள்ளார். "வாழ்க்கை என்பது அனுபவிக்க மட்டுமே இருவரும் என்ஜாய் செய்வோம்" என்று ஆங்கிலத்தில் மெசேஜ் செய்துள்ளார்.

மெதுவாக மேலதிகாரியின் தன்மையை புரிந்து கொண்ட பெண், தனக்கு ஏற்கனவே காதலர் உள்ளதாக கூறியுள்ளார். அதற்கும் சகலிக்காத மேலதிகாரி, "பரவாயில்லை நீ எனக்கு ரகசியமாக வேண்டும்" என்று பதிவு செய்துள்ளார். இந்த வாட்ஸ்அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சைபர் கிரைம் ஊழியர்கள் இதனை ஆராய்ந்த போது இது பெருநகர குழுமத்தின் மேலதிகாரி செய்த வேலைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  விவகாரமானது பெரிதாவதற்கு முன்னரே அந்தப் பெண் பணியில்இருந்து ராஜினாமா செய்து விட்டார். 

பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இதுபோன்ற பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கு விசாகா என்ற குழு ஒன்று உள்ளது. ஆனால் அந்தப் பெண் இது சம்பந்தமாக எந்த புகாரும் அளிக்கவில்லை. எனினும் சைபர் கிரைம் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மேலதிகாரி மீது விசாகா கமிட்டியில் விசாரணை தொடங்கியுள்ளது. 

இந்த சம்பவமானது பெருநகர குழுமத்தின் வளாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.