பெண்களுக்கு தி.மு.க.விடம் பாதுகாப்பு கிடைக்குமா..? பொதுமக்கள் மனுவுக்கு முதல்வர் அற்புத தீர்வு

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மிகவும் இயல்பாகப் பேசி மக்களை கவர்ந்து வருகிறார். அதன்படி, இன்று அவர் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.


திமுக ஒரு அராஜக கட்சி, ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் தாக்குகிறார். திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால், மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா, பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்குமா, நீங்களே எண்ணிப் பார்க்க வேண்டும்.

சட்டப்பேரவையிலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்திலே நான் சேவல் சின்னத்திலே வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக அமர்ந்திருந்தேன். அந்தக் காலகட்டத்திலே திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து, ஒரு எதிர்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கினார்கள் என்றால், ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களுக்கு எவ்வாறு திமுகவினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.

ஸ்டாலின் மனு வாங்கும் நிகழ்ச்சியில் திருமலை என்பவர் தனக்கு கறவை மாடு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் இவரோ, திருமலை என்ற சகோதரி தனது கணவரைக் காணவில்லை என்று மனு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் இல்லை நான் கறவை மாடு வேண்டும் என்று கேட்டிருக்கின்றேன் என்றார். இவர் கையில் வாங்குகின்ற மனுவிற்கே இந்த நிலைமை என்றால், பெட்டியில் போடுகின்ற மனுவுக்கு என்ன நிலைமை என்று எண்ணிப் பாருங்கள்.

இனிமேல் உங்கள் குறைகளை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளிடத்தில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு உங்களது பிரச்சனையைத் தெரிவிக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றோம். இதற்கான உதவி மையம் எண் 1100. இந்த எண்ணில் உங்கள் பிரச்சினையை எந்தத் துறைக்கு அனுப்பினாலும் அந்தத் துறை தீர்த்து வைக்கும். இது ஒரு விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டது.

குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி தி.மு.க.வை அலற விட்டுள்ளார்.