நடிகர் கலாபவன் மணி திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்!

3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த பிரபல வில்லன் நடிகரின் மரணத்தை மத்திய புலனாய்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.


தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல வருடங்களுக்கு வில்லனாக நடித்து வந்தவர் கலாபவன் மணி. இவர் திடீரென்று 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகமிருப்பதாக கருதப்பட்டது. அப்போது இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் ஆல்கஹால் மற்றும் க்ளோரிபைரிபோஸ் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக இந்த வழக்கானது மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. அவருடைய நண்பர்களான ஜாஃபர், சபுமோன் உட்பட 5 பேரிடம் பொய் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நீண்ட விசாரணைக்குப் பிறகு 35 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய புலனாய்வுத்துறை கொச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி கலாபவன் மணி கொல்லப்பட்டார் என்பதை இந்த ஆய்வறிக்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவருடைய உடலில் சேர்ந்தால் உணவுப்பொருளில் இருந்த விஷத்தாலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் க்ளோரிபைரிபோஸ் எனப்படும் விஷம் அவருடைய உடலில் பச்சை காய்கறி மூலம் அடைந்ததாக அறிக்கை கூறுகிறது. இவருடைய கல்லீரல் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தபோது அவருடைய உடலில் 4 சதவீதம் மெத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மோசமான கல்லீரலால் மெத்தில் ஆல்கஹாலை வெளியேற்ற இயலாது. ஆகையால் மெத்தில் ஆல்கஹால் உடலில் தேங்கியதும் அவர் இறந்ததற்கான காரணமாக கருதப்படுகிறது.  

அவருடைய உடலில் கஞ்சா இருந்ததற்கான கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் ஆயுர்வேத மருத்துவ முறையை கடைப்பிடித்தவர் என்பதால் அதன் மூலம் கஞ்சா உடலில் சேர்ந்து இருக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையானது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.