விஷம் வைத்து கொல்லப்பட்டாரா தலித் டிஎஸ்பி விஷ்ணு பிரியா? சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மை!

சென்னை: டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டது உண்மைதான், என சிபிஐ கூறியுள்ளது.


திருச்செங்கோடு மாவட்ட டிஎஸ்பியாக பணிபுரிந்தவர் விஷ்ணுப்ரியா. இவர், கடந்த 2015ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் கோகுல்ராஜ் என்ற இளைஞரின் மரண வழக்கை விசாரித்து வந்தார். அப்போது திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். உயர் அதிகாரிகளின் டார்ச்சர் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும், ஒருவேளை இது கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இது தற்கொலைதான் என அறிவித்தனர். ஆனாலும், இதில் சந்தேகம் இருப்பதாக, விஷ்ணுப்ரியா குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டதாக, தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை. அவராகவே முடிவெடுத்து இந்த தற்கொலையை செய்துகொண்டிருப்பதாக, சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும், சந்தேகம் இல்லாத காரணத்தால், இந்த வழக்கை உடனடியாக முடித்து வைக்கும்படி நீதிமன்றத்தை சிபிஐ வலியுறுத்தியுள்ளது.  

முன்னதாக, காலேஜ் படித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கோகுல்ராஜ், அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதி பெண் ஒருவருடன் பழகியதால், கொலை செய்யப்பட்டார். இதுபற்றி விசாரித்து குற்றவாளியை விஷ்ணுப்ரியா கண்டுபிடித்த நிலையில் அவருக்கு உயர் அதிகாரிகள் கடும்நெருக்கடி கொடுத்திருக்கலாம் அல்லது தடயத்தை அழிப்பதற்காக அவரை யாரோ விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.