உடையெல்லாம் கிழிந்து உடலெல்லம் ரத்தக் காயம்..! முதலாளியை நம்பி காரில் ஏறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! திருப்பூர் திகுதிகு!

பகுதிநேரமாக பணியாற்றி வந்த மாணவியை தொழிலதிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்திற்கருகே மங்கலம் இச்சிப்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு 34 வயதான சுப்பிரமணி சரவணகுமார் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஒரு பிரின்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். சோமனூரில் பணம் பரிவர்த்தனை செய்யும் கம்பெனியையும் நடத்திவருகிறார்.

இந்த கம்பெனியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் காலையில் வேலைக்கு சென்றார் சம்பந்தப்பட்ட பெண் இரவு நெடுநேரமாகியும் வரவில்லை. இதனால் கவலையுற்ற தந்தை அவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்தார்.

அப்போது அவர் கம்பெனியில் இருந்து கிளம்பி விட்டதாகவும் விரைவில் வீட்டுக்கு வந்து விடுவதாகவும் தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அந்த பெண் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். கம்பெனிக்கு சென்றபோது கம்பெனி பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே இரவு 10:30 மணியளவில் அந்த பெண் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை அவரிடம் நிகழ்ந்தது பற்றி விசாரித்தார். கம்பெனியில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை, சரவணகுமார் காரில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் காரில் சரவணகுமார் உடன்அதனை நம்பிய அந்த பெண்ணும் காரில் சரவணகுமாருடன் சென்றுள்ளார். 

சரவணகுமார் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனந்த பின் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு முட்புதரில் கீழே விழுந்தபோது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.