படுவேகம்! சாலையில் மட்டமல்லாக்காக கவிழ்ந்த அரசு பஸ்! துடிதுடித்த பயணிகள்! டிரைவருக்கு நேர்ந்த விபரீதம்!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலை திருப்பூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல்-வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சிங்காரப்பேட்டை என்னும் இடத்திற்கு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகியுள்ளது. 

ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான ரமேஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்திலிருந்த பயணிகளில் 15 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. 2 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.