தறிகெட்டு ஓடிய தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து! தூக்கி வீசப்பட்ட 7 மாணவிகள்! பெரம்பலூர் திகுதிகு!

பிரபல கல்லூரி பேருந்து தாறுமாறாக மோதி விபத்து ஏற்படுத்தியதில் 7 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


திருச்சியில் பெரம்பலூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தனலட்சுமி சீனிவாசன் என்ற புத்தகம் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலையில் சித்தளி என்னுமிடத்தில் பேருந்திற்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் அந்த கல்லூரியின் மற்றொரு பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் எதிரே வரும் பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பினார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து நிலையத்திற்குள் புகுந்து, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம், கோவில் மீது மோதியது.

இந்த பயங்கர விபத்தில் 7 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த மாணவிகளின் உறவினர்கள் பெரம்பலூர் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அந்த கல்லூரிக்கு சொந்தமான 20 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைத்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உறவினர்களுடன் சமாதானத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் நடந்த சாலை மறியல் ஆனால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே விபத்து ஏற்படுத்தியற்காக கடைக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவமானது பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.