ஹேட்ரிக் விக்கெட்! அன்னிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த பும்ரா!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 416 ரன்கள் குவித்தது . பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆரம்பித்தது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களை மட்டுமே எடுத்தது.

முதல் இன்னிங்சில் 8வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் . அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோவை ஆட்டமிழக்கச் செய்த பும்ரா , அடுத்த பந்தில் ப்ரோக்சை ஆட்டமிழக்கச் செய்தார் .பும்ரா அந்த ஓவரின் 4வது பந்தில் ரோஸ்டன் சேஸ் என்ற வீரரை DRS முறையில் அப்பிள் செய்து ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் . 

இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் .

இதற்கு முன்னதாக இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.