ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணியில் இருந்து பும்ரா நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்தியா
மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடேயேயான 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்திய
பந்து வீச்சாளர்களில் குறிப்பாக பும்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா பேட்ஸ்ட்மேன்களை திணற செய்தார். இவர் இந்த தொடரில் 21 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் ஜான்சன் மற்றும் கிளார்க் பும்ரா பந்து வீசும் விதத்தை பாராட்டினார்கள். இந்த நிலையில் பும்ரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனை
அறிவித்த பிசிசிஐ ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. மிக சிறப்பாக பந்து வீசி வரும் பும்ராவிற்கு இந்த நேரத்தில் ஓய்வு அளிக்கப்படுவது தவறா அல்லது சரியா என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
இவருக்கு
பதிலாக சிராஜ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சித்தார்த் கவுல் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.