அண்ணியுடன் கட்டாய உறவு! அண்ணனின் சம்மதத்துடன் தம்பிகள் தகாத செயல்! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

அண்ணியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்ள தம்பிகள் வற்புறுத்திய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் பாக்பாட் என மாவட்டம் அமைந்துள்ளது. பாலின சமத்துவமின்றி இந்தியாவில் அறியப்படும் முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களுக்கு பெண்கள் எளிதாக கிடைப்பதில்லை. இதற்காக இந்த மாவட்டத்தில் கொடுமையான வழக்கம் கையாளப்படுகின்றது. 

அதாவது பெண்ணை குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆண் முறைப்படி திருமணம் செய்து கொள்வார். இந்தப் பெண்ணை அவர்கள் விலைக்கு வாங்கி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். அதன் பின்னர் பல ஆண்கள் அவர்களுடன் ஒன்றாக குடும்பம் நடத்துவர். பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பங்களில் இது தலையாயது. ஆனால் வழக்கங்களை மீறி பெண்களால் இதுபோன்ற துயர சம்பவங்களை வெளியில் கொண்டுவர இயலவில்லை. 

இதே சம்பவம் 17 வயதே ஆன சிறுமி ஒருவருக்கு நடந்துள்ளது.அந்த சிறுமி லோரி சாரதி என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணமான 10 நாட்களிலேயே அந்தப் பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தன் கணவர் மட்டுமின்றி அவருடைய 2 சகோதரர்களுக்கும் மனைவியாக வாழ கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண் மறுத்த போது அவரை வற்புறுத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். அவர்களுக்குள் நாட்களை பிரித்துக்கொண்டு உடலுறவு கொள்வதாகவும், மீதி நாட்களில் மற்ற இருவரும் கவனிப் பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக்கொண்ட பெண்களை மாநில அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.