பிறந்தது முதல்..! 28 வருடங்களாக தங்கையை தூக்கி சுமக்கும் அண்ணன்..! நெகிழ வைக்கும் காரணம்!

நோயால் பாதிக்கப்பட்ட தங்கையை கடந்த 28 வருடங்களாக பார்த்துக்கொண்ட செய்தியானது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிறந்த முதலிலே மீனு என்ற பெண்ணுக்கும் கடுமையான நோய் ஏற்பட்டுள்ளது. இவருடைய அண்ணனின் பெயர் மனு. மீனு உலகை அவருடைய தாய் அரவணைப்புடன் பார்த்து கொண்டதை காட்டிலும் மனுவே அவரை அக்கறையுடன் பார்த்து கொண்டு வந்துள்ளார். 28 வயதாகியுள்ள மீனுவுக்கு கண்டிப்பாக ஒரு துணை தேவைப்படுகிறது. மனு ஒரு தந்தையைப் போன்று மீனுவை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். மீனுவை கவனிப்பதே தன்னுடைய முதல் வேலை என்றும் மனு கூறியுள்ளார்.

சமீபத்தில் மனுவிற்கு ரம்யா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அன்று கூட மனோ தன்னுடைய சகோதரியை தூக்கி சுமந்தபடியே இருந்துள்ளார். நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட சிலர் இருவருடைய பாசத்தையும் பறைசாற்றும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

இருவருடைய அண்ணன் தங்கை பாசத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்‌. இந்த செய்தியானது பலருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.