தங்கைக்கு காதல், காம வலை வீசிய அண்ணன்! ஏற்க மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்!

முன்விரோதம் காரணமாக அண்ணனே தங்கையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் உறையூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே அண்டக்கொண்டான் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.அவர் பெயர் மலர்விழி மீரா. அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் இவருடைய பெரியப்பாவின் மகனான முரளி என்பவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். இருவரும் கீரியும் பாம்பும் போல செயல்பட்டு வந்தனர். நேற்று வழக்கம் போல கல்லூரியிலிருந்து மீரா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வழியை முரளி மறித்துள்ளான். இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

கோபம் தலைக்கேறிய முரளி, தன்னிடம் இருந்த கத்தியால், மீராவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்தவெள்ளத்தில் மீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து முரளியை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் முதலில் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உறையூர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து மீராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்விரோதம் காரணமாக முரளி மீராவை கொலை செய்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

சகோதரி முறை கொண்ட மீராவை முரளி காதலித்துள்ளான். இதனை மீரா ஏற்க மறுத்தது தான் பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள். ஆனால் வெறி அடங்காத முரளி தனது கல்யாணத்துக்கு பிறகும் தங்கைக்கு காம வலை விரித்தது தான் இந்த சம்பவமானது துறையூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.