அண்ணன் இல்லாத நேரத்தில்..! அண்ணிக்கு கொழுந்தன் மூலமாக நேர்ந்த துயரம்! கிருஷ்ணகிரி சம்பவம்!

நிலத்தகராறில் அண்ணியை கொழுந்தன் தாக்க முயன்ற சம்பவமானது மத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் லக்ஷ்மி. லட்சுமியின் வயது 40. வேல்முருகனின் தம்பியின் பெயர் ராஜா. ராஜாவின் மனைவியின் பெயர் பாரதி. பாரதியின் வயது 23.

வேல்முருகனுக்கும் ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே நிலம் சம்பந்தப்பட்ட தகராறுகள் ஏற்பட்டு வந்தன. நேற்று மீண்டும் இருவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜா தன் மனைவி பாரதியுடன் வேல்முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் இல்லை. அண்ணி லட்சுமியிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதங்கள் முற்றிப்போய் ஆத்திரம் தலைக்கேறியதால் கணவன் மனைவி இருவரும் லட்சுமியை பயங்கரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் லட்சுமி படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அவர் மத்தூர் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது மத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.