விடிந்தால் தங்கைக்கு திருமணம்..! ஓடியாடி வேலை பார்த்த அண்ணனுக்கு நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்! துக்க வீடான கல்யாண வீடு! திருச்சி சோகம்!

தங்கையின் திருமண ஏற்பாட்டின் போது அண்ணன் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமானது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள குருவம்பட்டியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 3 சகோதரிகள் உள்ளனர். அதில் மூத்த 2 சகோதரிகளுக்கு திருமணம் முடித்துவிட்டார். இளைய சகோதரியான மீனாவுக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார் நேற்று வருகை தந்ததால் சமையல் வேலைகளில் தனபால் ஈடுபட்டிருந்தார். 

இயற்கை உபாதைக்காக தனபால் வீட்டின் பின்பகுதிக்கு சென்றார். அப்போது கிணற்றுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கட்டாந்தரையில் விழுந்துள்ளார். விழுந்த அதிர்ச்சியில் அவருடைய தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

திருமணத்தின் முன்தினத்தில் அண்ணன் இறந்ததால் இருவீட்டாரும் திருமண தேதியை ஒத்தி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.